இந்திய அணியில் ‘சேலம்’ மண்ணின் மைந்தர்.. ஜாம்பவான்களை திக்குமுக்காட வச்ச ‘யாக்கர்’.. முதல்வர் ‘அசத்தல்’ ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![CM Edappadi Palanisamy wishes to cricket player Natarajan CM Edappadi Palanisamy wishes to cricket player Natarajan](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/cm-edappadi-palanisamy-wishes-to-cricket-player-natarajan.jpg)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவிக்கு வரும் ஜனவரி மாதம் பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ஆஸ்திரிரேலிய தொடரின் முதல் டெஸ்ட் போட்டியோடு விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இதன்காரணமாக ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அணியில் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி20 அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த தமிழக வீரர் வருண்சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரான நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/eZsMvkMVCJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 9, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)