'AVENGERS' ஃபேனா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??.. தியேட்டர்'ல படம் பார்த்தே கின்னஸ் ரெக்கார்ட்.. COUNTS கேட்டதுக்கே தல சுத்துது..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Apr 18, 2022 03:03 PM

ஹாலிவுட்டில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு வெளிநாடுகளை தாண்டி, இந்தியா வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

man sets guinness record by watch spider man no way home 292 times

Also Read | பைக் விலை ரூ.71,000.. ஆனா நம்பர் ப்ளேட் ரூ. 15.4 லட்சம்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்..? மிரள வைத்த நபர்..!

அதிலும் குறிப்பாக, அதிக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள கதாபாத்திரம் என்றால் அது ஸ்பைடர் மேன் தான். தொடர்ச்சியாக வெளியாகி வந்த இதன் பாகங்கள், உலகெங்கிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பல கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 'Spider-Man : No Way Home' திரைப்படம், உலகம் முழுவதிலும் வெளியாகி இருந்தது.

இந்தியாவிலும் கொண்டாடிய ரசிகர்கள்

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பெரும் கொண்டாட்டத்திற்கு மத்தியில், ஜோராக வந்த ஸ்பைடர் மேன் படத்தை, ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தார்கள். அதிகாலை காட்சிகளின் போதும், ஸ்பைடர் மேன் மீதுள்ள அன்பின் காரணமாக, திரையரங்குகளை ரசிகர்கள் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது.

man sets guinness record by watch spider man no way home 292 times

படம் பார்த்து கின்னஸ் ரெக்கார்ட்

உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி பல்வேறு சாதனைகளை படைத்த Spider-Man : No Way Home படத்தின் பெயரில் அதன் ரசிகர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுவும், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தை திரையரங்கில் பார்த்தே சாதனை புரிந்துள்ளார். திரையரங்கில் படம் பார்த்து எப்படி சாதனை புரியலாம் என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.

man sets guinness record by watch spider man no way home 292 times

ஆனால், அவர் படம் பார்த்த எண்ணிக்கை தான், பலரையும் மிரண்டு போக செய்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் என்ற இளைஞர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் இந்தாண்டு மார்ச் 15 ஆம் தேதிக்குள் 292 முறை ஸ்பைடர் மேன் படத்தை பார்த்துள்ளார். ஆக மொத்தம், ராமிரோ படம் பார்க்க எடுத்துக் கொண்டது, 43216 நிமிடங்கள். மணிக்கணக்கில் சொல்ல வேண்டுமென்றால், 720 மணி நேரமும், நாள் கணக்கின் படி, 30 நாட்களும் ஆகும். அதே போல, இந்திய மதிப்பில் தோராயமாக, சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரை, டிக்கெட்டிற்கு ராமிரோ செலவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

man sets guinness record by watch spider man no way home 292 times

யோசிச்சு முடிவு பண்ணுங்க..

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே ராமிரோ அலானிஸ், 'Avengers : End Game' திரைப்படத்தை 191 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை 2021 ஆம் ஆண்டு, அர்னாவுட் கிளெய்ன் என்ற நபர், 'Kaamelott: First Instalment' என்னும் திரைப்படத்தை 204 முறை பார்த்து முறியடித்திருந்தார்.

man sets guinness record by watch spider man no way home 292 times

தொடர்ந்து, தன்னுடைய சாதனையை முறையடித்த நபரின் சாதனையை தற்போது ஸ்பைடர் மேன் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ராமிரோ. இது பற்றி பேசும் அவர், "எனது சாதனையை மீண்டும் யாராவது முறியடிக்க எண்ணினால், ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | குழந்தைகளுக்கு அழகான பேர் வைக்குறதுதான் வேல… லட்சக்கணக்கில் சம்பாதித்து அசத்தும் பெண்!

Tags : #MAN #GUINNESS RECORD #WATCH SPIDER MAN MOVIE #கின்னஸ் ரெக்கார்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man sets guinness record by watch spider man no way home 292 times | World News.