RRR Others USA

அமரேந்திர பாகுபலிக்கே TOUGH கொடுக்கும் தாத்தா.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Apr 01, 2022 05:56 PM

புகழ்பெற்ற பாகுபலி படத்தில் வருவதைப் போல யானையின் தும்பிக்கைகளில் வயதான நபர் ஒருவர் ஏறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Man climbs elephant trunk Bahubali style

ஆசையா மீன் ஆர்டர் செஞ்ச கஸ்டமர்.. தட்டில் வந்த மீனை பார்த்ததும் அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

பாகுபலி

பிராம்மண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பிரம்மாண்ட படம் தான் பாகுபலி - தி பிகினிங் (Baahubali: The Beginning). இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளிவந்தது முதல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை இந்த படம் பெற்றது. அதேபோல, படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2 தி கண்க்ளுஷன் (Baahubali 2: The Conclusion) படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Man climbs elephant trunk Bahubali style

இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகனான பிரபாஸ் ஓப்பனிங் காட்சியில் யானை மீது சர்வ சாதாரணமாக ஏறும் காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது வயதான நபர் ஒருவர் யானை மீது பாகுபலி ஸ்டைலில் ஏறும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகன்

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு காப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், மேலும், அந்தப் பதிவில்," பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் செய்வதைப் போலவே இவர் செய்திருக்கிறார்" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சட்டென்று சமூக வலை தளங்களில் வைரலாகி விட்டது.

Man climbs elephant trunk Bahubali style

வைரல் வீடியோ

கடந்த 30 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று காப்ரா இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதுவரையில் இந்த வீடியோவை 32,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இந்த வீடியோவை குறிப்பிட்டு," மனித-விலங்கு மோதல்கள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், இந்த ஆழமான மனித-விலங்கு பிணைப்பைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது. பரஸ்பர நம்பிக்கையுடனும் அன்புடனும் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பிணைப்பு இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Man climbs elephant trunk Bahubali style

பாகுபலி ஸ்டைலில் யானை பாகன் ஒருவர் தனது யானையின் மீது ஏறும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அந்த 13வது ஆள் யாரு? இம்ரான் கானின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஒற்றை புகைப்படம்.? முழு தகவல்..!

 

Tags : #BAAHUBALI #MAN #CLIMBS #ELEPHANT TRUNK #BAHUBALI STYLE #SSRAJAMOULI #OLD MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man climbs elephant trunk Bahubali style | India News.