சந்தேகப்பட்ட காதல் கணவன்.. கடுப்பில் மனைவி செஞ்ச பகீர் காரியம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி அருகே மர்மமான முறையில் இறந்துபோன ஆண் குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

360 டிகிரியில் எவெரெஸ்ட் சிகரம் .. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச அட்டகாசமான வீடியோ..!
காதல் திருமணம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய வயது 36. பாம்பு பிடிக்கும் தொழில் செய்துவந்த இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதன் இடையே வயிறு, மார்பு உள்ளிட்ட காயங்களுடன் நேற்று வினோத் குமாரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார் அவரது மனைவி. ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் குமார் மரணமடைந்திருக்கிறார்.
விசாரணை
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் காவல்துறையினர் வினோத் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதால் தன்னைத் தானே வினோத் குமார் தாக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், வினோத் குமாரின் உடலில் இருந்த காயங்களை ஆய்வு செய்த காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படவே, அந்த பெண்ணிடம் துருவி துருவி விசாரித்துள்ளனர் அப்போது அவர் சொல்லிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால் தினமும் இருவருக்குள்ளும் சண்டை நடைபெற்று வந்தததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மது போதையில் வீட்டிற்கு சென்ற வினோத், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், தனது மனைவியின் நடத்தையை சந்தேகித்து வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
விபரீதம்
இதனை அடுத்து, இரவு முழுவதும் நடைபெற்ற தகறாரில் கோபமடைந்த அந்த பெண், வினோத் குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே கணவர் மரணமடையவே காவல்துறையில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் வினோத் குமார் தன்னை தானே தாக்கிக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார் அந்த பெண். காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவரவே, வினோத் குமாரின் மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சூப்பர்மேனா இருப்பாரோ.. 50 மணி நேரத்துல 350 கிமீ.. இணையத்தை தெறிக்கவிட்ட இளைஞர்..வைரல் வீடியோ..!

மற்ற செய்திகள்
