பைக் விலை ரூ.71,000.. ஆனா நம்பர் ப்ளேட் ரூ. 15.4 லட்சம்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்..? மிரள வைத்த நபர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிதாக 71 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பைக்கிற்கு 15 லட்ச ரூபாய் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | IPL 2022: “நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்” “டி 20 போட்டியோட அழகே அதுதான்” – தோனி போல கூலாக பேசிய ஜடேஜா!
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரிஜ் மோகன் (வயது 42). இவர் விளம்பர தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் ஹோண்டா ஆக்டிவா பைக் பிரிஜ் மோகன் வாங்கியுள்ளார். 71 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய இந்த பைக்கிற்கு, பேன்சி நம்பரை வாங்க அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த சூழலில் சண்டிகர் மாநிலத்தின் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தில் பேன்சி நம்பர்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. மொத்தம் 378 நம்பர்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ 1.5 கோடி ரூபாய் ஏலம் போயுள்ளது. அதில் முதலாவதாக CH01- CJ-0001 என்ற நம்பர் 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு பிரிஜ் மோகன் ஏலத்தில் எடுத்துள்ளார். இதனை அடுத்து CH01- CJ-0002 என்ற நம்பர் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த பிரிஜ் மோகன், ‘நான் இந்த நம்பரை என்னுடைய ஆக்டிவா பைக்கிற்காக சமீபத்தில் வாங்கினேன். ஆனாலும் நான் காரை தான் அதிகமாக உபயோகபடுத்தி வருகிறேன்’ என கூறியுள்ளார். 71 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பைக்கிற்கு 15 லட்ச ரூபாய் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
