வீட்டுல மாமரக்கன்று நட்டதால் கோபம்.. பெத்த அப்பா அம்மான்னு கூட பாக்காம மகன் செஞ்ச பகீர் காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Apr 11, 2022 05:37 PM

கேரளாவில் மா மரக்கன்று வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் தந்தையை மகன் ஒருவர் கொலை செய்திருப்பது அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

man surrenders in IG Office after he attacked his parents

பாத்தாலே பதறுதே.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் பண்ண த்ரில் வீடியோ..!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மனைவி சந்திரிகா. சுப்பிரமணியன் ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்துவருகிறார். இந்த தம்பதியின் மகன் அனீஸ். 38 வயதான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சொந்த ஊர் திரும்பிய அனீஸ் தற்போது உள்ளூரிலேயே கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

man surrenders in IG Office after he attacked his parents

மா மரக்கன்று

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் முன்பாக மா மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார் சந்திரிகா. அப்போது வீட்டிற்கு வந்த அனீஸ், அந்த மரக்கன்றுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து மரக்கன்றுகளை அகற்றியது குறித்து சந்திரிகா அனீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுப்பிரமணியனும் வீட்டிற்கு வந்துள்ளார்.

மா மரக்கன்று வைத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனீஸ் தனது தாய் தந்தையை சாலையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த சுப்பிரமணியன் - சந்திரிகா தம்பதி அங்கேயே மரணமடைந்திருக்கின்றனர்.

man surrenders in IG Office after he attacked his parents

போலீஸ் வலைவீச்சு

தாய் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதற்குள் போலீசில் அகப்படாமல் இருக்க அங்கிருந்து ஓடி தலைமறைவாகி இருக்கிறார் அனீஸ். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அனீஸை காவல்துறையினர் தேடிவந்தனர்.

man surrenders in IG Office after he attacked his parents

இந்நிலையில், திருச்சூரில் உள்ள காவல்துறை ஐஜி அலுவலகத்தில் அனீஸ் நேற்று சரணடைந்திருக்கிறார். இந்த வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. கேரளாவில் மா மரக்கன்று வைத்த தகராறில் மகனே பெற்றோரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!

Tags : #KERALA #MAN #SURRENDER #IG OFFICE #ATTACK #PARENTS #மாமரக்கன்று #அப்பா #மகன் #கேரளா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man surrenders in IG Office after he attacked his parents | India News.