"உண்மையாவே இதான் நடந்துச்சு".... தனது 'திருமணம்' தொடர்பான குற்றச்சாட்டிற்கு... 'மனைவி'யுடன் விளக்கமளித்த 'அதிமுக' எம்.எல்.ஏ...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தனது காதலியை இன்று அதிகாலை திருமணம் செய்திருந்த நிலையில், அந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகளை கடத்திச் சென்று எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்ததாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

தனது வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரபு, மிகவும் நட்பாக எங்களிடம் பழகி வந்தார். அப்போது எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி, மகளின் மனதை மாற்றி அவர் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார் என கூறி வீடியோ ஒன்றை பெண்ணின் தந்தை சுவாமிநாதன் வெளியிட்டிருந்தார். அதே போல, மனமுடைந்த சுவாமிநாதன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், எம்.எல்.ஏ பிரபு தனது மனைவி சவுந்தர்யாவுடன் தன் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ளார். 'இன்று எனக்கும் சவுந்தர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை'.
'நானும், சவுந்தர்யாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தோம். சவுந்தர்யா வீட்டில் சென்று பெண் கேட்ட போது, அவரின் பெற்றோர்கள் எங்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, எனது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். இது தான் நடந்தது. சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு நான் கொலை மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
