''பப்ஜி'யில் மலர்ந்த காதல்!'.. மாலையும் கழுத்துமாக... திருமணம் முடித்து வந்த காதல் ஜோடி!.. 90S KIDS VS 2K KIDS!.. திருமணப் போட்டியில் முந்துவது யார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Sep 24, 2020 01:26 PM

கல்லூரிப் படிப்பை பாதியிலேயே மூட்டைக்கட்டிய  20 வயதான கன்னியாகுமரி மாணவி ஒருவர், தன்னுடன் பப்ஜி விளையாடிய இளைஞர் மீது கொண்ட காதலால் திருவாரூருக்கு தேடிச்சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

pubg kanniyakumari girl finds love in thiruvarur boy couple marriage

திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்த மரவியாபாரி சசிகுமாரின் இளைய மகள் பபிஷா. 20 வயதான இவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். பப்ஜி விளையாட்டில் மூழ்கியதால், கல்வியை பாதியிலேயே மூட்டைகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 19 ந்தேதி பபிஷா திடீரென மாயமானார். இது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாயமான பவிஷாவைத் தேடிவந்தனர்.

அப்போது, கழுத்தில் மாலையுடன் திருவட்டார் காவல் நிலையத்திற்கு வந்த பவிஷா, திரூவாரூரை சேர்ந்த பப்ஜி காதலன் அஜின் பிரின்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிரவைத்தார்.

பப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி தன்னை பத்திரமாக அழைத்துச்சென்ற வழிகாட்டியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அஜின் பிரின்ஸ் உடன் காதல் மலர்ந்ததாகவும், அவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

pubg kanniyakumari girl finds love in thiruvarur boy couple marriage

ஊரடங்கால் சேர முடியாமல் தவித்த நிலையில், கடந்த 19ந்தேதி தன்னை தேடி காரில் வந்த காதலன் அஜின் பிரின்ஸுடன் சென்று விட்டதாகவும், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் இருந்து மிரட்டல் வருவதால் பாதுகாப்பு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் இரு குடும்பத்தினரிடமும் எடுத்துகூறி சமரசம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்தனர். இதையடுத்து இருவரும் அருகிலுள்ள ஆலயத்தில் மாலைமாற்றி திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் அஜின் பிரின்ஸ், பபிஷாவை அழைத்துக் கொண்டு திருவாரூக்கு புறப்பட்டுச்சென்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pubg kanniyakumari girl finds love in thiruvarur boy couple marriage | Tamil Nadu News.