"கொரோனா 'டைம்'ல கல்யாணம்,.. யாராலயும் வர முடியல.." அதுக்கென்ன, ஒரு சிறப்பான 'ஐடியா' இருக்கு... அசத்திய 'தம்பதி'... வைரலாகும் 'புகைப்படங்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் காரணமாக பலரின் திருமணம் தள்ளிப் போயுள்ளது.
மேலும் சிலர், எளிமையான முறையில் மிகவும் குறைவான ஆட்களுடன் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அதே போல, ஊரடங்கு காலம் என்பதால் மிகவும் வித்தியாசமான முறையிலும் சிலர் திருமணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரோமானி (Romanee) மற்றும் சாம் (Sam) தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், பொது முடக்கம் காரணமாக உறவினர்கள் யாரும் வர முடியாத நிலை இருந்ததால் திருமணத்தை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம், இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்பதால், மிகவும் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை ரோமானி மற்றும் சாம் ஆகியோர் நடத்தி முடித்துள்ளனர்.
திருமணத்திற்கு உறவினர்கள் யாரும் வர முடியாத நிலை இருந்ததால், சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து உறவினர்களின் கட் அவுட்களை கார்டுபோர்டு அட்டையில் செய்து வைத்து திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் வெளியிட, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
முன்னதாக, மணமகளின் நண்பர் ஒருவர் திருமணத்திற்கு வர முடியாத நிலையில், அவருக்கு பதிலாக அவரின் பேனரை வைத்துக் கொள்ளலாம் என காமெடியாக கூறியதை வைத்து இந்த ஐடியா தோன்றியதாக தெரிவித்தனர். தாங்கள் திருமணத்திற்கு அழைக்க விரும்பிய 100 பேரின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி கட் அவுட் செய்து வைத்து திருமணத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.