"இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பாடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு விலக்கு அறிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
![internal semester exams cancel marks based on UGC AICTE, Says TN CM internal semester exams cancel marks based on UGC AICTE, Says TN CM](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/internal-semester-exams-cancel-marks-based-on-ugc-aicte-says-tn-cm.jpg)
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தின் உயர் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ரத்து செய்யப்படும் பாடத் தேர்வுகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் அரியர் தேர்வு எழுத வேண்டியவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)