“6 மாசமா பணத்த எடுக்கலனா இதுதான் நடக்கும்!”.. பென்ஷன்தாரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தமிழக கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்6 மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மண்டல அலுவலர்களுக்கு, தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் சமயமூர்த்தி அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் கடந்த 6 மாதங்களாக பணப்பரிவர்த்தனை நடைபெறாவிட்டால், சம்மந்தப்பட்ட வங்கி இதுகுறித்து, கருவூலத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டாலோ, அல்லது வங்கிக் கணக்கு குறித்த விபரங்களை ஆய்வு செய்யா விட்டாலோ அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து சேமிப்பு உள்ளிட்ட இதர பணங்களை தவிர்த்து ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இது கணக்குத்துறையில் வரையறுக்கப்பட்டுள்ள விதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.