“ஹலோ.. ஹலோ..?!!”.. திடீரென, அமைதியான மகளின் குரல்.. மீண்டும் வந்த ‘அதிர்ச்சி’ போன் கால்.. ‘பயங்கர’ அலறல் சத்தம்...! - சிறுவன் கண் முன்னே தாய்க்கு நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 26, 2020 01:14 PM

கனடாவில் பெண்ணொருவரை கரடி ஒன்று கடித்து குதறும் காட்சியை வீட்டுக்குள் இருந்தபடி அவரது 9 வயது மகன் பார்த்துக் கொண்டிருந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Woman killed by black bear while on phone with father and son watching

கனடாவின் Buffalo Narrows, Sask பகுதியில் உள்ள கிராமத்து வீட்டில் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கு வந்த 44 வயதான Stephanie Blais என்கிற பெண்மணி தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால் தன் கணவர் சரி செய்து கொண்டிருப்பதாக தொலைபேசியில் தனது தந்தையிடம் கூறி கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயம் தனது 9 வயது மகனை தந்தைக்கு உதவி செய்யும் விதமாக வீட்டுக்குள் சென்று ஆண்டன்னாவை எடுத்து வரச் சொல்லியும் அனுப்பியுள்ளார். பின்னர் தொடர்ந்து தனது தந்தையிடம் போனில் பேசிக் கொண்டிருந்த

Stephanie Blai திடீரென அமைதி ஆனதால், அவரது தந்தை ஹலோ ஹலோ என்று கத்தியுள்ளார். மகள் பேசுவதை நிறுத்தியதால் ஒன்றுமே புரியாமல் திணறியுள்ளார். அப்போது அவருக்கு ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டதாகவும் அதுதான் தன் மகளிடம் தான் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர்தான் உண்மையில் என்ன நடந்தது என்கிற தகவல் அவருக்கு தெரியவந்தது. அதன்படி போனில் பேசிக் கொண்டிருந்த Stephanie Blai-வின் பின்னால் இருந்து கரடி ஒன்று வந்து அவருடைய கழுத்தை தாக்கி உள்ளது.  இதனிடையே வீட்டிற்குள் சென்ற மகன் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்பது கவனித்து தனது தாயை திரும்பிப்பார்க்க தனது தாயை தன் கண்முன்னாலேயே துடிக்கத்துடிக்க கரடி ஒன்று கொல்வதைப்பார்த்துள்ளான். அந்தக் கோரக் காட்சியை பார்த்த சிறுவன் பதைபதைப்புக்குள்ளாகி உள்ளான்.

இது பற்றிப் பேசிய Stephanie Blai-ன் கணவர்,  Hubert Esquirol வீட்டில் சாட்டிலைட் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த Stephanie Blai-க்கு சிக்னல் சரியாக கிடைக்காததால் வீட்டிலிருந்து சற்று தொலைவான இடத்திற்கு சென்று தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று பின்னாலிருந்து வந்த கரடி அவரை பயங்கரமாக தாக்கியதால் அவர் தொடர்ந்து தந்தையிடம் போன் பேச முடியாமல் போனதாகவும், அவர் அங்கேயே உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுளார்.  மேலும் இதை ஜீரணிக்க முடியாத தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் தந்தையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதற்கு முன், தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறார் Stephanie Blai. இல்லை என்றால் அந்த கரடி குழந்தைகளையும் கொன்றிருக்கக் கூடும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman killed by black bear while on phone with father and son watching | World News.