'ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை'... 'இந்த மாதம் வரை இலவசம்'... தமிழக அரசு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஒருகிலோ கோதுமை நவம்பர் மாதம் வரை இலவசமாகத் தரத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமை வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் கூறும்போது, ''தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கோதுமையையும் நவம்பர் வரை இலவசமாகத் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒருகிலோ கோதுமையைத் தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்தம் 2 கிலோ கோதுமையைப் பயனாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்க வேண்டும், எனவும் ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
