கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Aug 13, 2020 08:14 PM

தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியாக இருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்துவருகிறது. கொரோனா பரிசோதனை விகிதமும், குணமடைவோர் விகிதமும் இந்தியா அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதிலிருந்து, தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்திறன் புலப்படுகிறது.

how tamil nadu is winning the battle against covid19

வருமுன் அறிதல்:

* வெளி மாநிலம் (அ) வெளி நாட்டிலிருந்து தமிழகத்திற்குள் வரும் யாவரும், எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதிருக்கும் நிலையில் மட்டுமே, நுழைவு அனுமதி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

*சென்னையில் 3-7 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று மக்கள் உடல்நிலையை பரிசோதிக்கின்றனர்.

தீவிர பரிசோதனை:

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 11 கோடி மக்கள் தொகை கொண்ட மஹாராஷ்டிரா, 2.7 மில்லியன் பரிசோதனைகளை மட்டுமே செய்திருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் 3.2 மில்லியன் பரிசோதனைகளைச் செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல்:

* தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதன் மூலம், தொற்று பரவும் வேகத்தை தமிழக அரசு வெகுவாகக் குறைத்துள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்:

* IVRS தொழில்நட்பத்தின் மூலம், பொதுமக்கள் கோவிட் உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும். தமிழக அரசின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

* லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க, Tamil Nadu e-Governance Agency (TNeGA) வர்த்தகத்திற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

தி சென்னை மாடல்:

* சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 87.5 ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் மிகச்சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

* முதலில் 1,000 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னையில் இருந்தன. தற்போது அவை, 24 ஆக குறைந்துள்ளன.

மேலும்,

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான RT-PCR மையங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 135 கோவிட் பரிசோதனை மையங்கள் (61-அரசு, 74-தனியார்) இருக்கின்றன.

* e-sanjeevani tele-consultation sessions-இல் தேசிய அளவில் தமிழகம் தான் முதலிடம்.

* கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.4 ஆக இருப்பதன் மூலம், தமிழகம் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.

* தமிழகத்தில் தான் அதிக அளவிலான அரசு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுவருகின்றனர்.

* தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகள் - (1,29,122), வெண்டிலேட்டர் - 2,882  அரசு மருத்துவமனைகளில் உள்ளன.

* பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. How tamil nadu is winning the battle against covid19 | Tamil Nadu News.