நான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.
பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார்.
பிறகு, சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக வழங்கப்படும் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், தியாகிகளின் ஓய்வூதியம் 17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
