'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 26, 2019 04:47 PM
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.இதையொட்டி மோடி தனது வேட்புமனுவை வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களின் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் வாங்கினார்.இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதள கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.அந்த கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும்,93 வயதான பிரகாஷ் சிங் பாதல் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார்.இந்த போட்டோக்களை மோடி ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.அதோடு ராகுல் மற்றும் சோனியா காந்தியை கிண்டலடிக்கும் விதமாக,மரியாதையை பிரதமர் மோடியிடம் இருந்து இருவரும் கற்று கொள்ள வேண்டும்,என பதிவிட்டு வருகிறார்கள்.இதனால் ட்விட்டரில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மோடியின் பெயரை வேட்பாளராக முன்மொழிந்த அன்னபூர்ணா சுக்லா என்பவரிடமும் மோடி ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.இதனிடையே மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, தமிழகத்திலிருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது மகனுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH: PM Narendra Modi meets NDA leaders at Collectorate office ahead of filing his nomination from Varanasi parliamentary constituency. pic.twitter.com/xVfO9kovHP
— ANI UP (@ANINewsUP) April 26, 2019
