'நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன்'...'தேர்தல் அதிகாரிகள்' அதிரடி...'நாய்க்கு ஏற்பட்ட நிலை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 30, 2019 01:37 PM
வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் பாஜகவிற்கு ஆதரவான ஸ்டிக்கருடன் திரிந்த நாய் மீதும்,அதன் உரிமையாளர் மீதும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் மக்களவை தேர்தலில்,தற்போது 4வது கட்ட தேர்தல் நடபெற்று முடிந்துள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்றது.நேற்றைய வாக்குப்பதிவின் போது,வாக்கு பதிவு மையத்தின் அருகில்,ஏக்நாத் மோதிரம் சவுத்ரி என்ற நபர் தனது நாயின் உடம்பில், பாஜக ஆதரவு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சுற்றி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாக்காளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள்.
இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஏக்நாத்தை கைது செய்த காவல்துறையினர்,பாஜக ஆதரவு ஸ்டிக்கருடன் இருந்த நாயையும் அழைத்துச் சென்றனர். தேர்தல் நடைபெறும் நாளில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பரப்புரையில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.எனவே இந்த விதிகளை மீறியதாக ஏக்நாத் கைது செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனிடையே ஏக்நாத்திற்கு சொந்தமான நாயின் மேல் ஒட்டப்படிருந்த ஸ்டிக்கரில் “ மோடிக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.