'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 02, 2019 10:00 AM

பிரதமர் மோடியை அமேதி தொகுதி சிறுவர்கள் திருடன்,திருடன் என்று கத்தும் வீடியோ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Children Abusing PM Modi video goes viral

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்திற்கு காங்கிரஸ் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.அதோடு அங்கிருக்கும் 40 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் நடுவே பள்ளி குழந்தைகளை சந்தித்த பிரியங்காவை கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.

இதனிடையே பிரியங்காவை சந்தித்த பள்ளி சிறுவர்கள் திடீரென,காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் ‘சோக்கிதார் சோர் ஹே' என கத்தத் தொடங்கினர். சமீபத்தில் தான் காவல்காரன் என பொருள்படும் சோக்கிதார் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.பல பாஜக தலைவர்களும் தங்களது பெயர்களுக்கு முன்பாக சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.அந்த வகையில் சோக்கிதார் என்றாலே மோடியை குறிப்பது போல மாறிவிட்டது.இந்த நிலையில், சிறுவர்கள் மோடியை திருடன் திருடன் என கத்தியதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார்.

பின்னர் பள்ளி சிறுவர்களிடம் அறிவுரை வழங்கிய பிரியங்கா 'நீங்கள் சொல்வது சரியல்ல,நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார். இதனிடையே பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர அது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.பாஜக இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.ஆனால் பிரியங்கா குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.ஆம் ஆத்மி பிரபலம் ஆல்கா லம்பா தனது பதிவில், சிறுவர்களிடம் பிரியங்கா நடந்த விதத்தை மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : #BJP #CONGRESS #RAHULGANDHI #SCHOOLSTUDENT #LOKSABHAELECTIONS2019 #NARENDRAMODI #TWITTER #PRIYANKA GANDHI #AMETHI #UTTAR PRADESH #CHOWKIDAR