‘அசால்ட்ப்பா இதெல்லாம்’.. மீன் பிடிப்பதுபோல் பாம்பைப் பிடித்து விளையாடும் பிரியங்கா.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 02, 2019 02:32 PM

பிரியங்கா காந்தி பாம்புகளை அசால்டாக கைகளால் தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

Watch Priyanka Gandhi holds snakes in hands at Raebareli video viral

உத்திர பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக மிக அண்மையில் நியமிக்கப்பட்டவர் பிரியங்கா காந்தி. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தின் ரேபரலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் உ.பி கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்திக்காக ரேபரலி தொகுதியில் தனது சூறாவளித்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக சிறுவர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, மோடி ஒரு சவுகிதார் (காவலாளி) அல்ல; அவர் ஒரு களவாளி என்று கூறியதும் சிறுவர்கள் ஓ’வென கத்தி ஆர்ப்பரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்ட  பிரியங்கா காந்தி, அங்கு சில பாம்பாட்டிகளை சந்தித்தார். அவர்களுடன் அமர்ந்து, அசால்ட்டாக கூடையில் இருந்த பாம்புகளை பிடித்து விடும் பிரியங்கா காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #RAHULGANDHI #CONGRESS #PRIYANKA GANDHI VADRA