#VIDEO: “மாடு மேய்க்கதான்ம்மா பிடிக்கும்!”.. “பேச்ச மாத்த மாட்டேன்! படிக்கல.. மாடு மேய்க்குறேன்” .. செல்லம் கொஞ்சும் மழலையின் ஒப்புதல் வாக்குமூலம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண் குழந்தைகள் செல்லம் கொஞ்சுவதை காண்பதே அழகுதான். அப்படித்தான் இந்த வீடியோவில் சிறுமி ஒருவர் படிப்பதற்குக் கடினமாக இருப்பதாகவும், அதனால் மாடு மேய்க்க செல்வதாகவும் தன் தாயிடம் சொல்கிறார். அதை சிறுமியின் தாய் வீடியோ எடுத்து கொண்டே, குறுக்கு விசாரணை செய்கிறார். இந்த வீடியோவில் ரசிக்கும்படியான மழலையின் பதில்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளன.
அதில் சிறுமி, “எனக்கு மாடு மேய்க்கிறது தான்மா ரொம்ப பிடிக்கும். சின்ன பெண்ணாக இருக்கும் போது கண்ணுகுட்டி மேய்க்கவும், பெரியவளான பின்பு மாடு மேய்க்கவும் விரும்புகிறேன்.!” என்று கூற, சிறுமியின் தாய், “ஓ.. மாடு மேய்க்குறது ஈஸி.. ஆனா படிக்க பிடிக்கலையா? ஏன்?” என கேட்க, “ஏனென்றால் நான் எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பேன். உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருப்பேன். அக்கா படிப்பதை பார்த்தால் கஷ்டமா இருக்கு!” என்று கூறுகிறார்.
“அக்கா படிக்க கஷ்டப்படுற மாதிரி உனக்கு தெரியுதா?” என மீண்டும் தாய் கேட்கிறார். அதற்கு சிறுமி, “ஆமாம், அக்கா லாப்டாப்பை வைத்துக்கொண்டு படிக்கவும் எழுதவும் சிரமப்படுகிறார். அது அவளுக்கு தப்பு தப்பாக இருக்கிறது. அது தான் எனக்கு பிரச்சனையே!” என்று கூறுகிறார்.
மீண்டும் தாய், “அதனாலதான் நீ மாடு மேய்க்கலாம் என முடிவு செய்து விட்டாயா? சரி.. பெரியவளான பின் பேச்சை மாற்ற மாட்டாயே?” என கேட்க, குழந்தை, “மாத்த மாட்டேன்!” என உறுதியாக கூற, “சரி நான் இது விஷயமா அப்பாவிடம் பேசுறேன் உன்ன ஸ்கூல்ல இருந்து நிறுத்திவிடலாம் சரியா?” என்று மழலை இடம் அந்தத் தாயும் பதிலுக்கு செல்லம் கொஞ்சுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது