'தாய்க்கு கொரோனா பாசிடிவ்...' 'கெட்ட நேரத்துல வந்த நல்ல செய்தி...' 'இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்...' - நெகிழ்ந்து போன டாக்டர்ஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதித்த 26 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா அடுத்த கவுரி பஜாரைச் சேர்ந்த 26 வயதான கர்ப்பிணி பெண் கொரோனா பாதிக்கப்பட்டு கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவலியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 4 குழந்தைகள் பிறந்துள்ளன. 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் கணேஷ்குமார், 'கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
குழந்தைகள் அனைத்தும் 980 கிராம் முதல் ஒன்றரை கிலோ வரை உள்ளது. பிறந்த 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். ஒரு குழந்தை மட்டும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் நலமாகவே உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்தும் 4 குழந்தைகளை பாதுகாப்புடன் பிரசவித்தது பெரிய விஷயமாக பார்க்கிறோம். மேலும் தற்போது 4 குழந்தைகளின் மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன' எனக் கூறியுள்ளார்.