VIDEO : WELCOME 'பேபி'... நடுவானில் கேட்ட 'குழந்தை' சத்தம்... 'உற்சாக' வரவேற்பளித்த 'விமான' ஊழியர்கள்... வைரலாகும் 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் நேற்று மாலை கிளம்பிச் சென்றது.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்தே குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த தாய் மற்றும் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல், இருவரும் நல்லபடியாக நேற்று மாலை பெங்களூர் வந்து சேர்ந்துள்ளனர். முன்னதாக, பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக் குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. மேலும், அந்த விமானத்தில் பெண் மருத்துவர் ஒருவரும் பயணம் செய்திருந்ததால் எந்தவித பிரச்சனையும் இன்றி குழந்தை பிறந்தது.
A baby boy was born on board Indigo flight from Delhi to Bangalore today. In all likely baby is getting life long free #IndiGo free ticket. Great work by #Indigo crew today. pic.twitter.com/gTREaa5yRd
— Sriram (@kbsriram16) October 7, 2020
அதே போல, அந்த பெண் கர்ப்பமடைந்து 32 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தான் அவரை பயணம் செய்ய விமான நிறுவனம் அனுமதித்தது. பெங்களூர் வந்தடைந்த தாய் மற்றும் குழந்தைக்கு இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் சிறந்த முறையில் வரவேற்பளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Amazing scenes. Baby born mid-air on @IndiGo6E Delhi - Bangalore flight today, helped by the airline's crew. 👏👏👍
Future IndiGo pilot perhaps. 😎#aviation #avgeek #india ✈ pic.twitter.com/0rJm7B5suQ
— Tarun Shukla (@shukla_tarun) October 7, 2020