'அப்பா நீங்களே மகனா பிறக்கணுனு ஆசைப்பட்டேன், ஆனா'... 'இளைஞர் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலில் குழந்தையில்லாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் சுவற்றில் உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாகர்கோவில் கோட்டார் தைக்காபள்ளி லாலாமுருக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (34). இவருடைய மனைவி சுதா (24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துவந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த சதீஷ் குழந்தை இல்லாத ஆதங்கத்தை தன்னுடைய மனைவி, உறவினர்கள், நண்பர்களிடம் அவ்வப்போது கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது. அனைவரும் அந்த சமயத்தில் ஆறுதல் கூறி மனதை தேற்றியும் சதீஷால் இயல்பான நிலைக்கு வர முடியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கத்தை விட மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்த சதீஷ் தூங்கச் செல்வதாக கூறி விட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சதீஷின் செயலால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவருடைய அறையின் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு சதீஷ் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே சதீஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அறைச் சுவரில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் உறவினர்களை அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. அதில், "என் அன்புள்ள அப்பா, நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை, அதன் காரணமாக உன்னிடமே நான் வருகிறேன். மேலும் என் மனைவியை எதுவும் சொல்லாதீர்கள்" என சதீஷ் எழுதி வைத்திருந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
