கல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்!.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாம்பு பிடிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த பணிக்காக அழைக்கப்படலாம். ஒரு திருமணத்துக்காக 6 முழம் புடவையை வரிந்துகட்டிக்கொண்டு தயாராக இருக்கும்போது கூட அவசர அவசரமாக அழைக்கப்படலாம்.

ஆம், அப்படி ஒரு சூழலில் தான் பெண் ஒருவருக்கு பாம்பு பிடிக்கும் பணிக்கான அழைப்பு வந்தது. திருமணம் ஒன்றுக்கு செல்வதற்காக பாரம்பரிய புடவை கட்டிக்கொண்ட் தயாராகிக் கொண்டிருந்த Nirzara Chitti திடீரென பாம்பு பிடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அவரும் அந்த கோலத்திலேயே சென்று ஒரு கையில் லைட் வெளிச்சத்துக்காக போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால், அந்த அடங்காத நாகப்பாம்பினை சற்று நேரத்தில் தன் புடவையலங்காரமும் ஒப்பானையும் கலையாமல், பிடித்துள்ளார்.
Virat Bhagini, a snake catcher, was dressed to attend a wedding when she was called to catch a snake in a home. She did it without any special equipment with perfect poise in a saree. pic.twitter.com/uSQEhtqIbA
— Dr. Ajayita (@DoctorAjayita) September 12, 2020
இத்தனைக்கும் பாம்பு பிடிப்பதற்கென்று எந்த ஒரு தனி உபகரணத்தையும் வைத்துக்கொள்ளாத Nirzara Chitti வெறும் குச்சி மூலம் அந்த பாம்பை கண்பார்வையில் படுமாறு வெளிக்கொண்டுவந்துவிட்டு, கையாலேயே அந்த சேட்டைக்கார பாம்பினை பிடித்து தன் யாரென்று அந்த பாம்புக்கு காட்டிவிட்டார்.
Nirzara Chitti-யும் அவரது கணவரும் வன உயிரியல் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
