'ராட்சத பட்டத்தின்' வாலில் சிக்கி.. 100 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்ட சிறுமி!.. ஒரு நொடியில் 'உறைய வைத்த' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவானின் நான்லியோ கடற்கரையில், பட்டம் விடும் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் 3 வயது சிறுமி ஒருவர் சிக்கியதை அடுத்து, பட்டத்துடன் சேர்ந்து வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பதைபதைப்புக்குள்ளாகியுள்ளது. எப்படியோ பட்டம் ஒன்றின் வாலில் சிக்கிய அந்த சிறுமி, பட்டம் பறக்கும்போது பட்டத்தின் வால் மேலெழும்பியதும், சுமார் 100 அடி உயரத்திற்கு வீசியெறியப்படுகிறார். அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் இதயமே நொறுங்கியது என்று சொல்லலாம்.
ஆனால் சிறுமியோ, பயந்து அலறும்போதும் கூட பட்டத்தை கெட்டியாகக் பற்றிக்கொண்டதால், ஒரு சுழற்று சுழற்றி சிறுமியை 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வந்தது. அப்போது சிறுமியை காப்பாற்றுவதற்காக காத்திருந்த மக்கள் சிறுமியை பிடித்துக்கொண்டனர். எனினும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் அந்த திருவிழாவும் உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட்டது.

மற்ற செய்திகள்
