'பரபரப்பான போட்டி'...'திடீரென கெத்து பண்ண கோலி'...'யார பாத்து என்ன செஞ்சாரு'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Sep 01, 2019 02:45 PM
ஒருநாள் போட்டியோ அல்லது டெஸ்ட் போட்டியோ கோலி செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் போட்டியின் நடுவே கோலி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. இந்திய அணி சார்பில் கோலி, அகர்வால் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்கள். இதனிடையே இரண்டாம் நாள் தொடங்கிய ஆட்டத்தில் ரிஷப் பன்ட் ஆட்டமிழந்தார். பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியாததால், 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக ஆடினார். இந்நிலையில் 80 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த இஷாந்த் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 92வது போட்டியில் தான் முதல் அரை சதத்தை அடித்து அசத்தினார். 7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்த இஷாந்த் சர்மாவின் இன்னிங்கிஸ் மிக முக்கியமாக அமைந்தது.
இதற்கிடையே இஷாந்த் சர்மா தனது முதல் அரை சதத்தை அடித்தவுடன் பெவிலியனில் இருந்த கேப்டன் கோலி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Maiden Test Fifty for Ishant Sharma 👏#WIvIND pic.twitter.com/AhKmVBOUjp
— Anupam (@Anupam381) August 31, 2019
