‘கொரோனா விழிப்புணர்வு’!.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 26, 2020 02:39 PM

கொரோனா வைரஸ் குறித்தும் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தங்களது பிள்ளைகளிடம் எப்படி புரிய வைக்க வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

How to talk to your children about Coronavirus

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலே இருந்து வருகின்றனர். இந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, ஏன் யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் நாம் வீட்டில் கொரோனா குறித்த செய்தியை மற்றவர்களிடம் பேசும்போது என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் குழப்பத்திலும், பீதியிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களிடம் வெளியே என்ன நடக்கிறது என்று எடுத்துக்கூற வேண்டும்.

இதுகுறித்து ஹெல்த்லைன் இதழுக்கு பேட்டியளித்த மருத்துவர் ஹெலே, ‘நீங்கள் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது போன்ற விஷயங்களை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் உங்கள் குழந்தைகளுக்கு புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் இருக்கும் பயம் போகும்.

தற்போது கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவி வருவதால் அதை படித்துவிட்டு குழந்தைகளிடம் பயமுறுத்தும் வகையில் பேசக்கூடாது. முதலில் அந்த பயம் உங்களிடம் இருக்கக்கூடாது. அடுத்து சுகாதாரமாக இருப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். அடிக்கடி கைக்கழுவுதல், முகம், வாய், மூக்கை தொடாமல் இருப்பதன் அவசியத்தை பற்றியும் பேச வேண்டும்’ என மருத்துவர் ஹலே தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #PARENTS