‘வாங்க வந்து ஒரு ஹலோ சொல்லிட்டு போங்க’.. ‘தோனி குறித்த கேள்விக்கு கோலியின் வைரல் பதில்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 22, 2019 03:55 PM

செய்தியாளர்களை சந்தித்த கோலி தோனி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Video Virat Kohlis Savage Reply To Reporters On MS Dhonis Future

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தப் போட்டிக்குப் பிறகான வெற்றிக் கொண்டாட்டத்தில் மகேந்திர சிங் தோனியும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ தோனி அறிமுக இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுடன் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்பட ஒன்றையும் பதிவிட்டுள்ளது.

இதையடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “அபாரமான தொடர் வெற்றிக்குப் பிறகு உண்மையான இந்திய லெஜண்டைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “தோனி இங்குதான் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கிறார். வந்து ஒரு சொல்லுங்கள்” என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். தோனியின் புகைப்படங்களும், அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Tags : #MSDHONI #VIRATKOHLI #TEAMINDIA #INDVSSA #VIDEO #VIRAL #PHOTO #RAVISHASTRI