தொட்டிலில் 'தூங்கிக்கொண்டு' இருந்த '1 வயது' குழந்தையை... 100 மீட்டருக்கு தூக்கிச்சென்று 'சோளக்காட்டில்' வீசிய சூறைக்காற்று!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை சூறைக்காற்று தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. 2 நாட்களுக்கு முன் இவரது 1 வயது பெண் குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் மேற்கூரையில் இரும்பு சட்டத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு இளையராஜா வீட்டின் மேற்கூரை பறந்து சென்றது.
மேற்கூரையுடன் சேர்ந்து பறந்து சென்ற தொட்டில் சுமார் 100 மீட்டர் தள்ளியிருந்த சோளக்காட்டில் விழுந்தது. இதற்கிடையில் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து குழந்தையை தேடினர். அழுகை சத்தம் கூட கேட்கவில்லை என்பதால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது சோளக்காட்டில் சென்று பார்த்தனர். அங்கு குழந்தை மேற்கூரைக்கு அடியில் கிடந்தது. இதைப்பார்த்து பெற்றோர் குழந்தையை மீட்டு வீட்டுக்கு தூக்கி வந்தனர். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் குழந்தைக்கு எந்த அடியும் படவில்லை என்பது தான். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் குழந்தையை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.