‘அடங்க மறுக்கும் கொரோனா’!.. சென்னையின் ‘இந்த’ ஒரு பகுதியில் மட்டுமே 2000-த்தை தாண்டிய பாதிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 16,277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு சென்னையில் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2065 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1488 பேரும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 1253 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1188 பேரும் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1096 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/UCsaGhOevn
— Greater Chennai Corporation (@chennaicorp) May 26, 2020

மற்ற செய்திகள்
