'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்!.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து மாட்டிக் கொண்ட ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்துமுள்ளனர். இவர்களுள் 84 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுமுள்ளது.
இதனிடையே சேலம் மருத்துவமனையில் கொரோனா வார்டிற்கு நேற்று இரவு பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் டெலிவரி செய்ய ஒருவர் வந்துள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்ததாக, அவர் தெரிவித்துள்ளார். உடனே இதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன் பின் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் 4 பேர்தான் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நோயாளிகளுக்கு எச்சரித்த மருத்துவர் உணவு கொண்டு வந்தவரை திருப்பி அனுப்பினார்.
