'கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்?'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்!.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாமராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 நர்சுகள் கடந்த சில நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில ஆஸ்பத்திரிகளில் சமீபத்தில் 600-க்கு மேற்பட்ட நர்சுகள் ராஜினாமா செய்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 நர்சுகள் கடந்த சில நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் கேரளாவுக்கு திரும்பி சென்று விட்டனர். அவர்கள் ராஜினாமாவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சொந்த ஊரை பிரிந்திருக்கும் ஏக்கம், முதலாளி மீதான அதிருப்தி ஆகியவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
