'ஊர் பூறா நச்சுக்காத்து'.. 'சிவலிங்கத்துக்கு மாஸ்க்'.. மாஸ் காட்டிய பக்தர்கள் சொன்ன காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 07, 2019 05:09 PM

வாரணாசியில் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்கும் விதமாக சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. 

Devotees covered Shivling\' at Tarkeshwar temple due to pollution

வாரணாசியில் நச்சு கலந்த மாசுக்காற்று சுழலுவதால், மூச்சுக் காற்றில் அந்த நச்சுக் காற்று கலந்தால் ஆபத்து என்று, அந்த காற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பலரும் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு செல்கின்றனர். 

இந்த நிலையில், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற தர்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கேஸ்வரரின் திருவுருவமான லிங்கத்துக்கும் சேர்த்து, பக்தர்கள் மாஸ்க் அணிவித்துள்ளனர். 

இதுபற்றி பேசிய அவர்கள், போல் பாபா என்று தங்களால் சொல்லப்படும் அந்த லிங்கேஸ்வரர் பாதுகாப்பாக இருந்தால்தான், அவர் தங்களையும் பார்த்துக்கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SHIVLING #TARKESHWAR MAHADEV #TEMPLE #DEVOTEES #VARANASI #POLLUTION