பிச்சை எடுக்குறவரோட 'பேங்க்' அக்கவுண்ட்ல எப்படி ரூ. 56 லட்சம் பணம்...? ஆக்சுவலா 'இவரு' யாரு...? - தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அரசு மருத்துவமனையில் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் 56 லட்சம் இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வாசலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த கூல் பாண்டி என தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் அந்த பகுதிகளில் பிச்சை எடுத்து காலத்தை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரவிய சூழலில், தான் பிச்சை எடுத்த பணத்தில் சுமார் 3 லட்ச ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தானமாக வழங்கியுள்ளார்.
இந்த செயல் காரணமாக, சிறந்த சமூக சேவகர் என்ற விருதையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து பெற்றுள்ளார். இறந்தபின் அவரின் பையில் இருந்த வங்கி புத்தகத்தை பரிசோதித்த போது, முதியவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வங்கியில் இருந்து 36 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக எடுத்திருந்ததாகவும், அதைத்தவிர, தற்போது அவருடைய வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரை நடத்திய விசாரணையில் முதியவர் பாண்டி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார் அவரின் இந்த நிலை குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
