'டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக...' 'அந்த வாக்சின்' ரொம்ப வீரியமா நின்னு பேசுது...! - ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனையோட்டத்தின் போதே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கிவிட்டது.
இந்தியாவில் மக்கள் விழிப்புணர்வு மூலம் பெருமளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடங்கிவிட்டனர். அவ்வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்-ம் இணைந்து தயாரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் திரிபான டெல்டா வகை கொரோனா இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பரவி வருகிறது.
இம்மாதிரி உருமாறிய கொரோனா வைரஸிற்கு எதிராக கோவாக்சின் எந்தளவுக்கு வீரியமாக செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பின் தீவிரத்தை 77.8% தடுக்கிறது எனவும், அதிலும் டெல்டா வகை திரிபென்றால் 65.2% தடுக்கிறது என்றும் கடந்த ஜூலை மாதம் கூறப்பட்டது.
அதோடு, தற்போது வரை கோவாக்சின் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால அனுமதியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அனுமதிக்காக பாரத் பயோடெக் நிறுவனம், விண்ணப்பித்துக்கொண்டு காத்திருக்கிறது.
இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 15 - 16 நாடுகளில் மட்டுமே போடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.