‘தோக்குறமோ, ஜெயிக்கிறமோ, மொதல்ல சண்டை செய்யணும்’!.. முகத்தில் 13 தையல்.. வேண்டாம் என தடுத்த மனைவி.. ஒலிம்பிக்கில் ஒரு ‘சார்பட்டா’ கபிலன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் தனது முகத்தில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல்களுடன் போட்டு சண்டையிட்ட சம்பவம் நெகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று ஆண்கள் 91 கிலோ எடைப்பிரிவுக்கான கால்இறுதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சதீஷ் குமார் 0-5 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இப்போட்டிக்கு முந்தைய ஆட்டத்தில் விளையாடியபோது சதீஷ் குமாரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் காயத்துக்கு 13 தையல்கள் போடப்பட்டது. ஆனாலும் மருத்துவரின் அனுமதியைப் பெற்று காயத்துடனேயே கால்இறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரரை சதீஷ் குமார் எதிர்கொண்டார். காயத்துடன் சதீஷ் குமார் விளையாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து கூறிய சதீஷ் குமார், ‘காயம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நிச்சயம் கால்இறுதியில் சண்டையிட வேண்டும் என்றே விரும்பினேன். வெற்றியோ, தோல்வியோ போட்டியில் பங்கேற்க வேண்டும். ஒருவேளை இப்போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால், அந்த குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கும். என் மனைவியும் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் பின்பு என் உணர்வை அவர் புரிந்துக்கொண்டார்’ என கூறியுள்ளார்.
𝗕𝗥𝗔𝗩𝗢 👏🏻
BFI President Mr. @AjaySingh_SG were all praises for @satishyadavbox on his courageous efforts at the quarterfinals of super heavyweight at @Tokyo2020 earlier today as he took boxing great Jalolov 💪🏻#RingKeBaazigar#Boxing#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/TxIzHwBL8U
— Boxing Federation (@BFI_official) August 1, 2021
இந்த நிலையில் இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ் குமாருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.