'காதலிக்கும்படி வற்புறுத்த முடியாது'.. 'ஆணுக்கு உரிமை இல்லை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 30, 2019 01:48 PM

தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை, ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

no man has right to compel any girl to fall love with him HC

இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில், அந்த இளம்பெண் மறுக்கவே, அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரின் சார்பில், ஜாமீன்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அந்த நபருக்கு ஜாமீன் தர மறுத்தார். மேறும் அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கவும் நீதிபதி ஆணையிட்டார். தன்னை காதலிக்குமாறு எந்த ஒரு பெண்ணையும் வற்புறுத்தும் உரிமை, எந்த ஒரு ஆணுக்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பெண் என்பவர் தனது விருப்பங்களெல்லாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற காரணம் என்றார் நீதிபதி. பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளே, அவர்களை மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதாக நீதிபதி தெரிவித்தார்.

அதற்காக பெண்ணை கத்தியால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதுபோன்ற வழக்குகளில் அனுதாபம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

Tags : #HIGHCOURT #BAIL