இலங்கை குண்டுவெடிப்பு.. ‘முதுகில் பையுடன் தேவாலயத்துக்குள் நுழையும் மர்ம நபர்’..அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 23, 2019 05:12 PM

இலங்கை தேவாலயத்தில் வெடிவிபத்து ஏற்படும் முன்னர் முதுகில் பையுடன் தேவாலயத்திற்குள் நுழையும் மர்ம நபரின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Sri Lanka terror attack CCTV footage shows terrorist in church

இலங்கையில் கடந்த 21 -ம் தேதி 9 தேவாலங்களில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 300 -க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 500 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த கொடூரத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் காரணம் என சந்தேகப்பதாக இலங்கை அரசின் சுகாதார அமைச்சர் ரஜிதா செனரத்னே தெரிவித்தார். மேலும் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெடிவிபத்து நடப்பதற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தேவாலயத்திற்குள் செல்லும் சிசிடிவி வீடியோ கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், முதுகில் பையுடன் தேவாலயத்துக்கு உள்ளே மர்ம நபர் செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.

Tags : #SRILANKATERRORATTACK #SRILANKA #CCTV