'கடைசி' நிமிஷத்துல தான் ரெண்டு பேரும்...அரசு மருத்துவர் 'வெளியிட்ட' புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தை-மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே மோசமான நிலையில் இருந்தனர். அவர்கள் சுயநினைவுடன் தான் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன.
மூச்சுத்திணறலுடன் வந்ததால் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடலில் ரத்தம் கசிந்த நிலையில் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் ரத்தக்கசிவு நின்று விட்டது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடைசி நிமிடத்தில்தான் என்னிடம் அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்
