“போலீசா?, அப்ப பால் கிடையாது” 'பால் முகவர்கள் சங்கம்...!' 'அதிரடி அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்இனி போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது எனப் பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சப் பால் முகவர்கள் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்தே போலீசார் ஏற்படுத்தும் சிக்கல்கள் காரணமாக பால் விநியோகம் செய்வதில் பல சிக்கல்கள் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பால் முகவர்களுக்கும், போலீசுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது. தடுத்து நிறுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைப் பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "கொரோனா பேரிடம் காலத்தில் மக்கள் அனைவருக்கும் தடையின்றி பால் கிடைக்க வேண்டும் என நாங்கள் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அத்தியாவசிய பொருள் என்பதால் எங்கள் பணிக்கு அரசும் தடை விதிக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில் எங்களை போலீஸ் பல்வேறு விதத்தில் சித்திரவதை செய்து வருகிறது. குறிப்பாக பால் முகவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, பால் விற்பனை மையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என அத்துமீறி சில செயல்களை செய்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர், போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.
இதனால் போலீஸ் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினை தீரும் வரை இந்த நிலை தொடரும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
