தோண்டத்தோண்ட கிளம்பும் பூதம்... அரசு அதிகாரிகள், 'போலீசாரை' விசாரிக்க சிபிசிஐடி முடிவு... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்காசி விவகாரத்தில் போலீசாரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெண்களை ஏமாற்றியது, ஆபாச வீடியோ எடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாகர்கோயிலை சேர்ந்த காசி(26) என்னும் சுஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரது நண்பர் டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின் அவரது மற்றொரு நண்பர் தினேஷ்(24) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கந்து வட்டிக்காக விலையுயர்ந்த பைக்கை காசி பறித்து பறித்துள்ளார். அந்த பைக் மீது கடன் இருந்தாலும் அது தொடர்பான ஆவணங்கள் காசி பெயருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக காசிக்கு தனியார் வங்கியில் இருந்தவர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. இதேபோல காசி மீது புகார்கள் வந்தபோது அதை விசாரிக்காமல் கிடப்பில் போட்டது தொடர்பாக சில போலீசாரிடமும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.