2 வருட பிரிவு... இடையில் புகுந்த 'இளைஞர்'... கண்மண் தெரியாத ஆத்திரத்தில்... 'கணவன்' செய்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்25 வயது இளைஞரை கல்லால் அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்(26). இவருடைய மனைவி தனலட்சுமி(26) இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விக்னேஷ்குமார் சிவகாசி பகுதியிலும், தனலட்சுமி படந்தால் பகுதியிலும் வசித்து வந்துள்ளனர்.
தனலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(25) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் விக்னேஷ் மனைவியை பார்க்க வந்துள்ளார். சதீஷ், தனலட்சுமி இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதைப்பார்த்த விக்னேஷ் ஆத்திரத்தில் கல்லால் சதீஷை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதில் காயமடைந்த சதீஷை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்து விட்டார். இதையடுத்து போலீசார் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய விக்னேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
