‘தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்’.. சாத்தான்குளத்தில் ‘புதிய’ காவல் ஆய்வாளர் நியமனம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதிய காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணை கைதிகாளாக அழைத்து சென்றனர். அங்கு காவலர்கள் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தந்தை, மகன் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மாற்றப்பட்டு, புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
