"தலையை காலால் அழுத்தி மிதிச்சு.. தரதரனு இழுத்துட்டு போய்".. 'பெண் போலீஸால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'!.. சிசிடிவியில் பதிவான உறையவைத்த காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரை பெண் போலீசார் ஒருவர் மிகவும் மோசமாக நடத்தக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கனடாவில் கெலோனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் பயிற்சி பெறுபவர் மோனோ வாங். மனப் பிறழ்ச்சி பிரச்சனை கொண்ட இவருக்கு, உதவி தேவை என இவரது ஆண் நண்பர், போலீசாரை அழைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் உதவிக்கு வந்த லேசி பிரவுனிங் எனும் பெண் போலீசாரோ தன்னை தாக்கியதாகவும் அவமதித்ததாக மோனா புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதற்கு விளக்கம் சொன்ன லேசி, தான் சென்று பார்க்கும் போது மோனா, குளியலறையில் விழுந்துகிடந்த இருந்ததாகவும், அவர் அருகே மாத்திரை மற்றும் ஒயின் பாட்டில்கள் இருந்ததாகவும், அவருடைய கையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும், அவருக்கு விலங்கு பூட்டுவதற்காகவே, வெறும் கையால் அவரை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தான் பாதி நினைவுடன் குளியலறையில் கிடந்தபோது, லேசி தன்னை வயிற்றில் எட்டி மிதித்ததாகவும் தன் கையில் ஏறி நின்றதாகவும் மோனா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் நினைவின்றி நடக்கும் மாணவி மோனாவை, அந்தப் பெண் போலீசார் வழி முழுவதும் தரதரவென தரையில் பிடித்து இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அப்படி எடுத்து வரும்போது ஒரு கட்டத்தில் கீழே கிடந்த மோனா மெதுவாக தலையை உயர்த்தியபோது, காலால் அவரது தலையை மிதித்து தள்ளும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. பின்னர் மோனாவின் தலை முடியையும் தோளையும் பிடித்து தூக்கிக் கொண்டு அந்த பெண் போலீசார் அவரை இழுத்துச் செல்கிறார். இந்த வீடியோ காட்சிகளால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பெண் போலீசாரான லேசியை நிர்வாகப் பொறுப்புகள் துறைக்கு மாற்றம் செய்ததோடு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே விசாரணை முடிந்ததும் தனிப்பட்ட முறையில் அவர் மீது கிரிமினல் விசாரணை மேற்கொள்ள கனேடிய போலீஸ் துறையும் கூடுதல் உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
