தந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரம்... லாக்-அப் 'மரணம்' கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை-மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தந்தை-மகன் மரணம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-
சாத்தன்குளத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2 நாட்கள் கழித்தே உயிரிழந்தனர். லாக்-அப்பில் இருக்கும் போது காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் மட்டுமே அது லாக்-அப் மரணம். மேலும் நீதிமன்றத்தின் அறுவுறுத்தலின் படி இருவரின் உடல்களுக்கும் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது.
மேலும் சாத்தான்குளம் சம்பவம் லாக்-அப் மரணம் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்திலும் லாக்-அப் மரணம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் 1996-ல் திமுக ஆட்சி காலத்தில் 2 பேர் உயிரிழந்த லாக் அப் மரணம் நடைபெற்று உள்ளது. இதை அரசியலுக்காக அவர் சொல்லுவதாக தான் எண்ண வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தினை தேர்தல் வாக்கு வங்கிற்காக எதிர்கட்சிகள் செய்ய நினைத்தால் மக்களுக்கு உண்மை தெரியும்.
முதலில் காவ்துறையினர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார். நீதிமன்றம் என்ன வழிமுறை சொல்கிறதோ, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்
