குவைத் காதல், 2-வது திருமணம்... பட்டப்பகலில் 'தஞ்சை'யை பதறவைத்த படுகொலை... 'தலைமறைவான' மனைவி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி-தஞ்சை வல்லம் சாலையில் இன்று மதியம் மர்ம நபர்கள் யூசுப்பை படுகொலை செய்துள்ளனர்.

தஞ்சாவூர் காயிதே மில்லத் பகுதியை சேர்ந்தவர் யூசுப்(45). இவரது 2-வது மனைவி அசிலா. இருவரும் காயிதே மில்லத் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியத்துக்கு மேல் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற யூசுப்பை மர்ம நபர்கள் சிலர் வல்லம் மேம்பாலம் அருகே வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
காரில் இருந்து யூசுப் ஓட முயற்சி செய்ய அவரை மர்ம நபர்கள் துரத்தி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் யூசுப்பின் இயற்பெயர் ஜோசப் என்பதும் குவைத்தில் வேலை பார்க்கும்போது இலங்கைப்பெண் ஒருவரை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதற்காக மதம் மாறிய ஜோசப் தன்னுடைய பெயரை யூசுப் என்று மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு பின் இருவரும் தஞ்சாவூரில் வசித்து வந்துள்ளனர். அசிலாவிற்கு தஞ்சாவூரில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்துகளைக் கேட்டு அசிலாவிடம், யூசுப் பிரச்னை செய்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் அசிலா, யூசுப் மீது 2 முறை புகார் அளித்து இருக்கிறாராம்.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் யூசுப் இன்று படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கிடையே 2-வது மனைவி அசிலா தலைமறைவாகி விட்டார். போலீசார் தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
