'சாயங்காலம்' ஆனா ஆரம்பிச்சுடுறாங்க... வடசென்னையை கட்டுப்படுத்த... களமிறங்கிய 'கமாண்டோ' வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை பொறுத்தவரை வடசென்னை பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ராயபுரம், திரு.வி.க.நகர், தண்டையார்ப்பேட்டை, எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிவதையும், முக கவசம் இல்லாமல் நடமாடுவதையும் அதிகமாக காண முடிகிறது.

மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடங்கள் என்பதால் இந்த பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை ஆகியோருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக போலீசாரும் ஊரடங்கை முழுவதுமாக அமல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை பகுதியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு தமிழக அரசின் கமாண்டோ படையினர் தற்போது களமிறக்கப்பட்டு உள்ளனர்.
வடசென்னை பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இனி தேவையில்லாமல் சுற்றுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறந்த நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள், ''மக்களை அச்சுறுத்துவதற்காக கமாண்டோ படையினர் வரவில்லை.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படையினர் வந்திருக்கிறார்கள். இவர்கள் வடசென்னை பகுதிகள் முழுவதும் வலம்வந்து அணிவகுப்பு நடத்தி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். அதேவேளை கண்காணிப்பு பணிகளிலும் போலீசாருக்கு உதவிகரமாக இருப்பார்கள். வடசென்னை பகுதிக்கு கமாண்டோ படையினர் வருகை தந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது,'' என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மற்ற செய்திகள்
