'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சென்னையில் மட்டும் பாதிப்படைந்த காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதிக பாதிப்படைந்த மாவட்டங்களில் சென்னையே முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைக்கு சுமார் 47,650 கடந்துள்ளது.
இதில் முன்களப்பணியாளர்களாக கருதப்படும் காவலர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1005 ஆக உள்ளது.
ஆறுதலளிக்கும் விஷயமாக 500க்கும் மேற்பட்ட காவலர்கள் குணமடைந்து, அதில் 410 பேர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் காவல்துறையில் முதல் கொரோனா வைரஸ் உயிரிழப்பும் சென்னையிலே நடந்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள காவலர்களில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் 1500ஐ எட்டியுள்ளது.

மற்ற செய்திகள்
