'சோதனை மேல் சோதனை... தளபதியை பறிகொடுத்த சில தினங்களில்... இயற்கையும் விட்டுவைக்கவில்லை ஈரானை...!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jan 08, 2020 08:06 PM

போர்மேகமும் அழுகுரலும் சூழ்ந்துள்ள ஈரானில், அந்நாட்டின் புஷெர் அணுஉலை அருகே இன்று காலை பூகம்பம் தாக்கியுள்ளது.

Earthquake hits Iran amidst escalating war tensions

கடந்த சில தினங்களுக்கு முன், ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி காசிம் சொலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அதற்குப்  பழிக்குப் பழி வாங்கும் முனைப்பில் ஈரான் ராணுவம், இன்று அதிகாலை ஈராக் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்களை  தாக்கியது.

ஈரானின் இந்த எதிர்தாக்குதல் சர்வதேச அளவில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 176 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது போன்ற தொடர் இன்னல்களைச் சந்தித்து வரும் ஈரானுக்கு மேலும் ஒரு துன்பியல் சம்பவம் அந்த நாட்டு மக்களை கலங்கடித்துள்ளது.

ஈரான் நாட்டிலுள்ள புஷெர் அணுஉலையின் சுற்று வட்டாரத்தில் 4.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்தின் ஆழம் மற்றும் மையப்புள்ளியை ஆய்வு செய்ததில், அது இயற்கையான நிகழ்வு தான் என்றும், "அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கும், நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை" என்றும் ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : #EARTHQUAKE #IRAN #USA