legend updated

அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 25, 2019 06:10 PM

சீனாவில் சாலையில் இருந்த அட்டைப் பெட்டிக்குள் சிறுமி ஒளிந்திருப்பது தெரியாமல் கார் ஒன்று அதன்மீது ஏறிச் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 year old girl survives after getting run over by an SUV

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது சாலையில் இருந்த அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்துள்ளார். அதைக் கவனிக்காமல் அந்த வழியாக வந்த கார் ஒன்று சிறுமி இருந்த அட்டைப்பெட்டி மீது ஏறியுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக மகளை மீட்டு மருத்துமவனையில் சேர்த்துள்ளார். நெஞ்சு எலும்பில் முறிவு ஏற்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அட்டைப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது எனப் பார்க்காமல் காரை ஏற்றியதற்காக ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் பெற்றோர் சிறுமியை சாலையில்  விளையாட அனுமதித்ததற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Tags : #CHINA #5YEAROLD #GIRL #ACCIDENT #SHOCKING #VIDEO